திருநெல்வேலி மாவட்டத்தில் இளைஞர் கவின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த ஆணவக் கொலை குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் தனது ஆழ்ந்த கவலைவை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழக அரசுக்கு அவர் விடுத்துள்ள கோரிக்கையில், “திருநெல்வேலி, சிவகங்கை, புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டங்களில் அடிக்கடி ஆணவச் சம்பவங்களும், வன்கொடுமைகளும் நடைபெற்று வருகின்றன. எனவே, இம்மாவட்டங்களை வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகளின் கீழ் ‘அடிக்கடி வன்கொடுமை நடைபெறும் பகுதிகள்’ (Atrocity Prone Areas) என அறிவிக்க வேண்டும். மேலும், அந்தந்த இடங்களில் சிறப்பு காவல் நிலையங்கள் நிறுவப்பட்டு, பாதுகாப்பு வலுப்படுத்தப்பட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
கவின் கொலை வழக்கு முழுமையாக விசாரணை செய்யப்பட்டு, குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் எனவும் பா.ரஞ்சித் தனது அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

