திருச்சி தேசியக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் டிஜிட்டல் கல்வி அறிவியலில் இளைஞர்களின் பங்கு தலைப்பில் ஏழு நாள் சிறப்பு முகாம் திருச்சி மேலப்பாண்டமங்கலம் ஆர் தயாநிதி நினைவு வித்யாசாலா மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முகாமில் துணிப்பைகளை பயன்படுத்துவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில்,பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்கவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும்
Author: vnewstamil
கருவின் பாலினத்தை தெரிவித்து வந்த தனியார் மருத்துவமனைக்கு சீல்!
சேலம் எடப்பாடியில் கருவின் பாலினத்தை தெரிவித்து வந்த தனியார் மருத்துவமனைக்கு சீல்! சேலம் மாவட்டம் எடப்பாடியில் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை சட்டவிரோதமாக தெரிவித்து வந்த தனியார் மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கர்ப்பிணிப் பெண் ஒருவரை ஸ்கேன் செய்ய அனுப்பி வைத்த நிலையில், திடீரென உள்ளே நுழைந்த அதிகாரிகள், மருத்துவமனையின் செயல்பாடுகளை சோதனை செய்தனர். இதில், மருத்துவர் கண்ணன், அவரது மனைவி ஜோதி
நாகர்கோவில் சிறையில் கைதிகள் மோதல் – 2 பேர் காயம்
நாகர்கோவில்: நாகர்கோவில் சிறையில் கைதிகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பேச்சியப்பன், முத்துராஜ் ஆகிய இருவரும் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த மோதல் தொடர்பாக 13 கைதிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூரில் தமிழக வெற்றி கழக பிரசார கூட்டத்தில் பரிதாபம் – 36 பேர் பலி
கரூர் மாவட்டம் வெலுசாமிபுரத்தில் நடிகர்-அரசியல்வாதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் சார்பில் நேற்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பரிதாபகரமான சம்பவம் ஏற்பட்டது. பிரசார நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மக்கள் ஒருவரை ஒருவர் தள்ளியதால் பலர் தரையில் விழுந்து மிதிபட்டு உயிரிழந்தனர். ஆரம்ப தகவலின்படி 36 பேர் பலியானதுடன், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரில் பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமியரும் அடங்குகின்றனர். சம்பவம் குறித்து அரசு உயர்
காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 6-ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறப்பு – சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை
சென்னை, செப்.27– காலாண்டுத் தேர்வு கடந்த 10-ந்தேதி தொடங்கி, நேற்றுடன் நிறைவுற்றது. தேர்வுக்குப் பிறகு வழங்கப்படும் காலாண்டு விடுமுறை, பள்ளிக் கல்வியாண்டு நாட்காட்டியின் படி இன்று (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது. மொத்தம் 9 நாட்கள் காலாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் அக்டோபர் 6-ந்தேதி (திங்கட்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இடைப்பட்ட காலத்தில் ஆயுதபூஜை, காந்தி ஜெயந்தி போன்ற அரசு விடுமுறைகளும் சேர்வதால், இந்த ஆண்டு
சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் நிரந்தரமாக நியமனம்
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த என். செந்தில்குமார், ஜி. அருள்முருகன் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். இவர்களை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை செய்ததை தொடர்ந்து, ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில், நேற்று இருவரும் பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவத்சவா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில், நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், ஜெ.
மருத்துவமனைக்கு முற்றுகை போராட்டம்!
மதுரை: சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் இறந்து மூன்று நாட்கள் ஆனதை மறைத்து, ‘சிகிச்சை’ என்ற பெயரில் பணம் வசூலித்ததாக மதுரை வேலம்மாள் மருத்துவமனை மீது உறவினர்கள் குற்றச்சாட்டு சாட்டியுள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த மாணவியின் உறவினர்கள், நண்பர்கள் மருத்துவமனைக்கு முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, மருத்துவமனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
காஷ்மீர் இளைஞர் கைது – பயங்கரவாதிகளுக்கு உதவி செய்த குற்றச்சாட்டு
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை செய்து தந்ததாக தெற்கு காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உள்ளூர் ஆதரவாளர்கள் உதவியிருக்கிறார்களா என்பதை விசாரிக்கும் நிலையில், அந்த இளைஞர் மீது சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த போலீசார், அவரை கைது செய்தனர். உள்ளூர் நபர்கள் இன்னும் யாரேனும் இதில் தொடர்புடையவர்களா என்பதை கண்டறிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
09அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் (FERA )சார்பாக வாலாஜா வட்டாட்சியர் அலுவலகத்தில் மேற்படி சங்கங்களின் 9 அம்ச கோரிக்கைகவருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் (FERA )சார்பாக வாலாஜா வட்டாட்சியர் அலுவலகத்தில் மேற்படி சங்கங்களின் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் தலைவர் பா.சிவக்குமார் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது . இந்த போராட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக
PUBG அடிமையால் 4 பேரைக் கொன்ற சிறுவனுக்கு 100 ஆண்டு சிறை!
பாகிஸ்தானில், PUBG விளையாட்டில் தோல்வியால் விரக்தியடைந்த நிலையில், தாய் கண்டித்ததற்குக் கோபமடைந்த சிறுவன் ஜைன், துப்பாக்கியால் தன் தாயையும் 3 சகோதரர்களையும் சுட்டுக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் நீதிமன்றம், சிறுவனின் வயதை கருத்தில் கொண்டு மரண தண்டனை விதிக்காமல், 4 ஆயுள் தண்டனைகள் — மொத்தம் 100 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்துள்ளது.

