சென்னை, செப்.2– சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். கே.கே.நகர், தி.நகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் ஒரே நேரத்தில் தொடங்கிய இந்த சோதனையில், சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள், சான்றுகள் என்பன பறிமுதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ராஜஸ்தானைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு தொழிலதிபர் அரவிந்த் என்பவரின் இல்லத்திலும் அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இச்சோதனையால் அந்தந்த பகுதிகளில் பரபரப்பு
Author: vnewstamil
சென்னை சூளைமேட்டில் பெண் விபத்து
சென்னை, சூளைமேடு வீரபாண்டி நகர் 1-ஆம் தெருவில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் இருந்தது. அந்த வழியாக நடந்து சென்ற ஒரு பெண், கவனக்குறைவால் பள்ளத்தில் விழுந்து உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உள்ளூர் மக்கள், தோண்டப்பட்ட பள்ளங்களை பாதுகாப்பாக மூடாமல் விடுவதை கண்டித்து, உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிங்க்’ ஆட்டோக்கு பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை, செப்.1 – தமிழக அரசின் இளஞ்சிவப்பு (பிங்க்) ஆட்டோ திட்டத்தின் கீழ் பெண்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 20 முதல் 45 வயதுக்குட்பட்ட, சென்னையை சேர்ந்த பெண்கள் இதில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சென்னை மாவட்ட சமூக நல அலுவலர், 8வது தளம், சிங்கார வேலர் மாளிகை, சென்னை–600 001 என்ற முகவரிக்கு, வரும் 15ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
கண்ணூரில் அமீபா மூளைக்காய்ச்சலால் பெண் உயிரிழப்பு
கண்ணூர், செப்.1– கேரளாவில் அரிதான வகை நோயான அமீபா மூளைக்காய்ச்சல் பரவல் கவலைக்கிடமாக தொடர்கிறது. கண்ணூர் மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த 52 வயது பெண் ஒருவர், கடந்த மாதம் இந்நோயால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற அவர், உடல்நலம் தேறியதால் கடந்த மாதம் 11-ம் தேதி வார்டுக்கு மாற்றப்பட்டார். ஆனால், ஆகஸ்ட் 26-ம் தேதி மீண்டும் காய்ச்சல்,
ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக தமிழகம் வருகை
சென்னை, செப்.1: இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை (செவ்வாய்க்கிழமை) 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். சென்னைக்கு வருகை தரும் அவர், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்து கொள்கிறார். பின்னர் கவர்னர் மாளிகையில் தங்கும் ஜனாதிபதி, மறுநாள் திருச்சியில் நடைபெறும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில்
டி.ஜி.பி நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி. நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. டி.ஜி.பி. பதவிக்கான காலம் நிறைவடைவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே தகுதியான அதிகாரிகளின் பட்டியலை யுபிஎஸ்சிக்கு பரிந்துரைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் முன்பு உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவை பின்பற்றாமல், தமிழக அரசு வெங்கட்ராமனை சட்டம் ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக நியமித்திருப்பது நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி
விஷப்பூச்சி கடித்து இளம்பெண் உயிரிழப்பு
ஆவடி, செப்.1– ஆவடி அருகே விஷப்பூச்சி கடித்ததில் 19 வயது இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அடுத்த கண்ணப்பாளையம் பாரதி நகரைச் சேர்ந்த சங்கர் (47), தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சர்மிளா (19), அயப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 29ம் தேதி காலை சர்மிளா
ரூ.8 லட்சம் கடன் வாங்கிய வாலிபர் – திருப்பிச் செலுத்தாமல் பொய் புகார்:
சென்னை, செப்.1– சென்னை திருமங்கலம் ஜமீன்தார் தெருவை சேர்ந்த ரமேஷ் சந்த், மோட்டார் சைக்கிள் மற்றும் கார்கள் தொடர்பான பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டுள்ளார். பெரம்பூர், தீட்டி தோட்டத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (32), தனது மோட்டார் சைக்கிளின் ஆர்.சி. புத்தகத்தை அடமானம் வைத்து ரமேஷ் சந்திடம் ரூ.8 லட்சம் கடன் பெற்றார். பின்னர், அந்த ஆர்.சி. புத்தகம் தொலைந்துவிட்டதாகக் கூறி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் புகார் அளித்து டூப்ளிகேட் ஆர்.சி. புத்தகத்தை பெற்றார்.
புதிதாக உருவாகும் குப்பை மேடு. வைத்தியநாதன் மேம்பாலம்.
சென்னை, செப்.1 – தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மாநகராட்சி ஊழியர்களே திட்டமிட்ட வகையில் குப்பைகளை அங்கு கொட்டுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குப்பை மூட்டைகளால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் மற்றும் நோய்த்தொற்றுகள் பரவும் அபாயமும் அதிகரித்துள்ளதாகவும், இதனை தவிர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க மாநகராட்சி உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
முதலாம் ஆண்டு மாணவர் தாக்குதல் – 6 மூத்த மாணவர்கள் மீது வழக்கு
ஜார்கண்டில் ராகிங்: முதலாம் ஆண்டு மாணவர் தாக்குதல் – 6 மூத்த மாணவர்கள் மீது வழக்கு ராஞ்சி, செப்.1 – ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டம் முருபண்டா கிராமத்தில் செயல்பட்டு வரும் ராம்கர் இன்ஜினீயரிங் கல்லூரியில் ராகிங் சம்பவம் இடம்பெற்றது. கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர் ஒருவரை, இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக

