மதுரை: சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் இறந்து மூன்று நாட்கள் ஆனதை மறைத்து, ‘சிகிச்சை’ என்ற பெயரில் பணம் வசூலித்ததாக மதுரை வேலம்மாள் மருத்துவமனை மீது உறவினர்கள் குற்றச்சாட்டு சாட்டியுள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த மாணவியின் உறவினர்கள், நண்பர்கள் மருத்துவமனைக்கு முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, மருத்துவமனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
Author: vnewstamil
காஷ்மீர் இளைஞர் கைது – பயங்கரவாதிகளுக்கு உதவி செய்த குற்றச்சாட்டு
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை செய்து தந்ததாக தெற்கு காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உள்ளூர் ஆதரவாளர்கள் உதவியிருக்கிறார்களா என்பதை விசாரிக்கும் நிலையில், அந்த இளைஞர் மீது சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த போலீசார், அவரை கைது செய்தனர். உள்ளூர் நபர்கள் இன்னும் யாரேனும் இதில் தொடர்புடையவர்களா என்பதை கண்டறிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
09அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் (FERA )சார்பாக வாலாஜா வட்டாட்சியர் அலுவலகத்தில் மேற்படி சங்கங்களின் 9 அம்ச கோரிக்கைகவருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் (FERA )சார்பாக வாலாஜா வட்டாட்சியர் அலுவலகத்தில் மேற்படி சங்கங்களின் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் தலைவர் பா.சிவக்குமார் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது . இந்த போராட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக
PUBG அடிமையால் 4 பேரைக் கொன்ற சிறுவனுக்கு 100 ஆண்டு சிறை!
பாகிஸ்தானில், PUBG விளையாட்டில் தோல்வியால் விரக்தியடைந்த நிலையில், தாய் கண்டித்ததற்குக் கோபமடைந்த சிறுவன் ஜைன், துப்பாக்கியால் தன் தாயையும் 3 சகோதரர்களையும் சுட்டுக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் நீதிமன்றம், சிறுவனின் வயதை கருத்தில் கொண்டு மரண தண்டனை விதிக்காமல், 4 ஆயுள் தண்டனைகள் — மொத்தம் 100 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்துள்ளது.
சோளிங்கர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பிஎல் டு, பி எல் சி மற்றும் கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பிஎல் டு, பி எல் சி மற்றும் கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி கழக சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் பசுமை செம்மல் வினோத் காந்தி மேற்பார்வையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் தனியார் திருமண மண்டபத்தில் சோளிங்கர் வடக்கு ஒன்றிய திமுக
சென்னை போலீசாருக்கு ஆயுள் தண்டனை
சென்னை கோட்டூர்புரத்தில் 2009ஆம் ஆண்டு நடந்த மரண வழக்கில், முன்னாள் எஸ்.ஐ. மற்றும் 2 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. குடிபோதையில் தகராறு செய்த பழனி என்ற நபர் காவல் நிலையம் சென்று வீடு திரும்பியதும் உயிரிழந்தார். இதையடுத்து ஆர்.டி.ஓ. விசாரணையில், போலீசார் தாக்கியதே மரணத்திற்குக் காரணம் என தெரியவந்தது. இதனால் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. அதன்பேரில் அப்போது எஸ்.ஐ.யாக பணியாற்றிய ஆறுமுகம்
மாநில அரசின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் (56) இன்று உடல் நலக்குறைவால் காலமானார்
கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக பணியாற்றிய அவர், தனது சிறப்பான சேவையால் பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் பாராட்டைப் பெற்றிருந்தார். அவரது மறைவுக்கு அரசியல், நிர்வாக வட்டாரங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றன.
வாட்ஸ்ஆப்பில் மொழிபெயர்ப்பு வசதி விரைவில்!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வரும் வாட்ஸ்ஆப்பில், புதிய வசதிகள் தொடர்ந்து அறிமுகமாகி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, தற்போது பயன்பாட்டுக்குள் உள்ள செய்திகளை நேரடியாக மொழிபெயர்க்கும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது. இந்த புதிய அப்டேட்டின் மூலம், பல்வேறு மொழிகளில் வரும் செய்திகளை உடனடியாகத் தங்களுக்குப் புரியும் மொழிக்கு மாற்றிக் கொள்ள முடியும். உலகம் முழுவதும் உள்ள பயனர்களுக்கு மிகுந்த உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் குமார் கொலை வழக்கு: சாட்சிகள் பாதுகாப்பில்
மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் 5 போலீசாரால் தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் சாட்சிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. சம்பவத்தின் பின்னர் போலீசார் சாட்சிகளின் வீடுகளில் சிசிடிவி கேமராக்கள், அலாரம், கதவு பாதுகாப்பு மற்றும் ரகசிய லென்ஸ் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வழக்கில் சாட்சி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக கவனிக்கப்பட்டு வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.
நீதிபதிக்கு எதிராக நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி மீது நிர்வாக நடவடிக்கை எடுக்க விசிலன்ஸ் பதிவாளர் விசாரணை நடத்தி அறிக்கை தயார் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு, மாவட்ட நீதிபதி சங்கர் கணேஷுக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, நிர்வாக ரீதியில் நடவடிக்கை எடுக்க தேவையான விசாரணையை உறுதி செய்வதற்காக அளிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் விசிலன்ஸ் பதிவாளர் சமர்பிக்கும் அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தின் நிர்வாகக் குழு மற்றும்

