சென்னை, ஆக.31 –
தமிழகத்தில் பொறுப்பு டி.ஜி.பி நியமனம் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு முரணாக செய்யப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
இந்தப் பதவிக்குத் தகுதியான 6 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பதவி உயர்வில் புறக்கணிக்கப்பட்டு, அவர்களின் உரிமை மாநில அரசால் தட்டிப் பறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
அண்ணாமலை தனது அறிக்கையில், “சட்டம் ஒழுங்கு காவல்துறை அமைப்பு நேர்மையுடனும், சட்டபூர்வமுமான நியமன முறைகளுடனும் இயங்க வேண்டும். ஆனால், தற்போதைய டி.ஜி.பி நியமனம் அந்த நடைமுறைகளுக்கு முரணானது” எனக் குறிப்பிட்டார்.

