பேருந்து நிறுத்தம் கோரி அனைத்து வணிகர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.!
திமிரியில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் அனைத்து பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்று அனைத்து வணிகர் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அளித்தனர்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆட்சியர் அலுவலகதுக்கு அனைத்து வணிகர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் சரவணன் தலைமையிலான வணிகர்கள் மற்றும் திமிரி பொதுமக்கள் சார்பில் 100-க்கும் மேற்பட்டவர்கள் மனு அளிக்க வந்தனர்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவர்களை தடுத்து, முக்கிய நிர்வாகிகள் மட்டும் அதிகாரியை சந்தித்து மனு அளிக்குமாறு அறிவுறுத்தினர். அதன்படி, சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவனை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது,
திமிரிக்கு பல ஆண்டுகளாக எதிர் பார்த்து இருந்த புதியதாக பேருந்து நிலையம் நவீன முறையில் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இதற்கிடையே, திமிரி நேரு பஜார், மார்க்கெட் சாலை, காவனூர் சாலை, ஆரணி சாலை மற்றும் பழைய பஜார், நம்பரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள், தள்ளுவண்டி, சாலையோர கடை மூலமாக பொருட்களை விற்பனை செய்து வருகின்றோம்.
புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதால், நேரு பஜாரில் எந்தவொரு பேருந்துகளும் நின்று செல்வதில்லை. இதனால், பஜாா் பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. வியாபாரம் பெருமளவில் குறைந்து விட்டது.
திமிரி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தற்போது, பேருந்து நிலையத்தில் மாணவர்கள் சென்று வருவதற்கு மிகுந்த சிரமப்படுகின்றனர். இதனால், மாணவர்களின் சேர்க்கையும் வரும் கல்வியாண்டில் குறைய வாய்ப்பு உள்ளது. எனவே, பேருந்து நிறுத்தம் இல்லாத காரணத்தினால் வியாபாரிகளுக்கு வாழ்வதாரம் பாதித்துக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் கல்வி பயிலும் மாணவர்களும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, திமிரி நேரு பஜாரில் மீண்டும் அரசு பேருந்துகள் நின்றுச்செல்ல வேண்டும் ” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் 9150223444..