அனைத்திந்திய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவர் A.S.புகழேந்தி செட்டியார் அறிக்கை
அனைத்திந்திய செட்டியார்கள் பேரவையின் நிறுவனத் தலைவர் A.S.புகழேந்தி செட்டியார் வெளியிட்டுள்ள அறிக்கையில் 
சென்னையில் அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு சென்னை மகளீர் நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது.மேலும் தண்டனை ஆண்டான 30 ஆண்டுகளை குறைக்கக்கூடாது.90ஆயிரம் அபராத தொகையையினை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும்.ஜெயில் தண்டனையின் போது குற்றவாளி ஞானசேகரனுக்கு எந்த சலுகையும் வழங்க கூடாது என்ற வழங்கப்பட்ட தீர்ப்பு சிறப்பானது.அதிலும் விரைவாக விசாரித்து உரிய நேரத்தில் வழக்கை முடித்து நீதிதுறைக்கு பெருமை சேர்த்துள்ள சென்னை மகளீர் நீதிமன்றத்திற்கு எங்கள் அனைத்திந்திய செட்டியார்கள் பேரவையின் சார்பில் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

