சென்னை: வாகன ஓட்டிகள், உங்கள் நிலுவையில் உள்ள TRAFFIC FINE-களை முழுமையாக அல்லது 50% வரை குறைக்க அரிய வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்பு 2025, செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய லோக் அதாலத் திட்டத்தின் போது வழங்கப்படுகிறது.
ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாமை, சிக்னலில் நிற்காமல் செல்வது போன்ற 13 விதமான போக்குவரத்து விதிமீறல்களில் உங்கள் மீது விதிக்கப்பட்ட அபராதம் குறைக்கப்படும்.
இதற்காக, முதலில் National Legal Services Authority (NALSA) இணையதளத்தில் பதிவு செய்து டோக்கன்களை பெறுவது அவசியம்.

