திருச்சி புத்தூர் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை காந்தி அஸ்தி மண்டபம் அருகே உள்ள வயலூர் பேருந்து நிலையம் அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத முதியவர் இறந்து கிடந்தார். இது குறித்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை காவல் நிலையத்தினர் விசாரணை செய்ததில் யாசகம் கேட்டு ஜீவனம் நடத்தி அங்குள்ள கடைகளுக்கு முன்பு உண்டு, உறங்கியும் ஆதரவற்றவராய் வாழ்ந்து வந்துள்ளார். வயது முதிர்வு மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இறந்துள்ளார். அவரின் இறப்பில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் தெரிந்துள்ளது. முதியவர் உடலை யாரும் உரிமை கோராத நிலையில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு நல்லடக்கம் செய்வதற்காக தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை காவல் நிலைய சட்ட ஒழுங்கு சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் உடன் இணைந்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் திருச்சி குழுமிக்கரை மயானத்தில் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்தார்.