பெங்களூருவில் தெருநாய் கடித்து 4 வயது சிறுமி பலி!
பெங்களூரு, ஆகஸ்ட் – தவணாகெரே பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமி, தெருநாய் கடித்ததில் ஏற்பட்ட ரேபிஸ் நோயால் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி, அந்தச் சிறுமியை தெருநாய் கடித்தது. இதையடுத்து அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
சுமார் நான்கு மாதங்களுக்கு மேல் தொடர்ந்து சிகிச்சை பெற்றும், நிலைமையில் முன்னேற்றம் இல்லாமல், இறுதியாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடம் பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தெருநாய்கள் கட்டுப்பாட்டில் வைக்கப்பட வேண்டும் என்பதற்கான கோரிக்கை மீண்டும் வலுப்பெற்று வருகிறது.

