ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சியை தூய்மை நகராட்சியாக மாற்ற நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதில் தூய்மை பணியாளர்களை கொண்டு தள்ளுவண்டி மூலம் வீடு வீடாக மக்கும் குப்பைகள் மக்கா குப்பைகள் என தரம் பிரித்து சேகரித்து வருகின்றனர் . நகரத்தின் முக்கிய பகுதிகளான பேருந்து நிலையம், கருமாரியம்மன் கோயில் பூட்டு சாலை, பாட்டிகுளம் கூட்டு சாலை, வாரச்சந்தை, தக்கான்குளம், மலை அடிவாரம் உள்ளிட்ட அவர்களில் டிராக்டர் மூலம் குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து வருகின்றனர். மேலும்
நகராட்சிக்கு உட்பட்ட 27வார்டு பொது இடங்களில் குப்பை கொட்டி சுகாதார சீர்கேட்டை ஏற்படும் பகுதிககளை கண்டறிந்து அப்பகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் இங்கு யாரும் குப்பை கொட்ட கூடாது மீறி கொட்டும் நபர்கள் மீது 500 ரூபாய் அபராதமும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். மேலும் வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். குப்பைகளை பொது இடங்களில் போடக்கூடாது என நகராட்சி நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.தூய்மை நகராட்சியாக மாற்ற பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
![]()
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.9150223444

