ராணிப்பேட்டை மாவட்டம்
சோளிங்கர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பிஎல் டு, பி எல் சி மற்றும் கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி கழக சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் பசுமை செம்மல் வினோத் காந்தி மேற்பார்வையில்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் தனியார் திருமண மண்டபத்தில் சோளிங்கர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பி எல் டு, பி எல் சி மற்றும் கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, இந்தக் கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் சுப்பிரமணி, சம்பத், தண்டபாணி, வாசுதேவன்,பழனி, சக்கரவர்த்தி, நரசிம்மன்,பிரகாசம், இளைஞர் அணி காண்டீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் சோளிங்கர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் பாஸ்கரன், மாவட்ட துணைச் செயலாளர் சிவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு 2026 வரும் தேர்தல் தமிழகத்தில் அதிக சட்டமன்ற தொகுதி கைப்பற்றி வெற்றி பெற வேண்டும் இதற்கு கிளை கழக நிர்வாகிகள் அயராது உழைக்க வேண்டும், நடைபெறும் உள்ள முப்பெரும் விழாவில் அனைத்து கிளைகளிலும் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும், மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கும், கிளைக் கழக நிர்வாகிகளுக்கும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள், அப்போது வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள், பிற அணி நிர்வாகிகள், மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே சுரேஷ்.

