பைக்கில் பெட்ரோல் டேங்கில் பெண்ணை அமர வைத்து அட்டகாசம் செய்த ஜோடிகள் – தலா ரூ.3,000 அபராதம்
திருத்தணி: நெடுஞ்சாலையில் பாதுகாப்பு விதிகளை மீறி பயணித்த ஜோடிகள் மீது போக்குவரத்து காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.
திருத்தணியை அண்மித்து கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், ஒரு பைக்கில், பெட்ரோல் டேங்க் மீது பெண்ணை அமர வைத்து, ஆண்கள் சாலையில் வேகமாக செல்கின்றது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.
இந்த வீடியோவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இருவரையும் கண்டறிந்த போலீசார், சாலை பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக தலா ரூ.3,000 என்ற அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பொதுமக்கள் மற்றும் மற்ற வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இவ்வகையான கண்காணிப்புகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

