திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் சிறுதானிய ஆண்டு முதல் நாள் தபால் உறை குறித்த சிறப்பு சொற்பொழிவு திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் தலைவர் விஜயகுமார் வரவேற்றார். நிறுவனர் நாசர் துவக்க உரையாற்றினார். பொருளாளர் தாமோதரன், இணைப் பொருளாளர் மகாராஜா, அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் அன்பழக பாண்டியன், சிவகுமார், குத்புதீன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.செயலர் விஜயகுமார் 2018 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாகக் கடைப்பிடிக்க முன்மொழிந்தது, இது உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டது.சிறுதானியங்கள் சத்தான உணவு வகைகளில் ஒன்றாகும், மேலும் தீவிரமான காலநிலையிலும் வளர்க்கக்கூடிய கடினமான பயிர்களில் ஒன்றாகும். அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு காரணமாக, அவை “ஊட்டச்சத்து தானியங்கள்” என்றும் அழைக்கப்படுகின்றன. சிறுதானியங்களின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசாங்கம் 2018 ஆம் ஆண்டில் 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாகக் கடைப்பிடிக்க முன்மொழிந்தது , இது உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டது. இந்திய அஞ்சல் துறை சிறுதானிய ஆண்டை முன்னிட்டு வெளியிட்ட முதல் நாள் உறை குறித்தும் சிறப்பு முத்திரை குறித்தும் விளக்கினார்.

