தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனத்தில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல் சென்னை மற்றும் புறநகர் நகர் பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தில் சுத்திகரிக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் குழாய் மூலமாக தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இந்த ஆயில் குழாய்களில் திடீர் ஆயில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆயில் குழாய்களில் கசிவு ஏற்பட்ட நிலையில் குழாயில் ஆயில் அனுப்புவதை நிறுத்தியபின்பு ஆயில் கசிவால் தீ பற்றி எரிய தொடங்கிய நிலையில் காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், மருத்துவ துறையினர் மற்றும் மாவட்ட தொழில்துறை மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அனைத்து துறையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கு பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் முனைய மேலாளர் நவீன்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

