அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது.

அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது.

தமிழ் பஞ்சாங்க அடிப்படையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4ம் தேதி முதல் 28ம் தேதி வரை “அக்னி நட்சத்திரம்” என்று அழைக்கப்படும் “கத்திரி வெயில்” காலம் கணக்கிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், 25 நாட்களுக்கு நீடிக்கும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது.

அக்னி நட்சத்திரம் தொடங்கும் போது முதல் 7 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகி கொண்டே போகும். 21வது நாளில் வெயில் உச்சத்தை தொடும். அதன்பிறகு படிப்படியாக வெயில் குறைய தொடங்கும். சூரியனுக்கு அருகில் வான் வெளியில் மே‌ஷம் எனும் நட்சத்திர மண்டல பகுதிகள் வருவதையே வெப்பம் மிகுந்த காலமாக உணர்கிறோம். கோடை காலத்தையொட்டி வரும் கத்திரி வெயில் காலத்தில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கோரத்தாண்டவம் ஆடும்.

அப்போது எல்லாம் தமிழ்நாட்டில் பல இடங்களில் உச்சபட்ச வெயில் பதிவாகும். அதிக வெப்பம் நிலவும் கத்திரி வெயில் காலகட்டத்தில் மதிய நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

தேவையின்றி வெளியில் செல்லக்கூடாது. அதிக வெப்பநிலை வெப்பச் சோர்வு மற்றும் வெப்ப பக்கவாதம் போன்ற வெப்பம் தொடர்பான நோய்களுக்கு வழிவகுக்கலாம். இது உயிருக்கு ஆபத்தாகவும் முடியலாம்.

வெப்பமான வானிலை அதிக வியர்வையை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் போதுமான நீர் ஆகாரங்களை பருகவில்லை என்றால் நீரிழப்புக்கு வழிவகுக்கும்.

அதீத நீரிழப்பு உடல் செயல்பாட்டை பாதிக்கலாம் மற்றும் பிற உடல்நலப் பிரச்னைகளை அதிகரிக்கலாம். எனவே கவனமாக இருந்து உடலைக் காத்துக்கொள்ள வேண்டும்.

பருத்தி ஆடைகளை அணிவதுடன் வெளியே செல்லும்போது குடைகளை எடுத்து செல்வது நல்லது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook