திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் மாநில அளவிலான அஞ்சல் தலை கண்காட்சியில் வெற்றி பெற்ற அஞ்சல் தலை சேகரிப்பாளருக்கு பாராட்டு விழாவினை திருச்சியில் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் விஜயகுமார் வரவேற்றார். நிறுவனர் நாசர் துவக்க உரையாற்றினார். தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார். விழாவில், தமிழ்நாடு அஞ்சல் வட்டம் தென்னிந்திய தபால் தலை சேகரிப்பாளர்கள் சங்கத்துடன் (SIPA) இணைந்து சென்னை ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கில் நடத்திய
மாநில அளவிலான தானாபெக்ஸ் 2025 தபால் தலை கண்காட்சியில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு கருப்பொருள்களில் 500க்கும் மேற்பட்ட அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் அஞ்சல் தலை சேகரிப்பினை காட்சிப்படுத்தியிருந்தனர். கண்காட்சியில் 15 ஆண்டுகளாக அஞ்சல் தலை சேகரிப்பில் ஈடுபட்டுள்ள மருந்தாளுநர் சண்முகம், அவரது மனைவி மருந்தாளுநர் ரேவதி,, மகள் கிருத்திகா சண்முகம் உள்ளிட்டோர் ஆங்கில மருத்துவம் சார்ந்த கருப்பொருளில் அஞ்சல் தலை சேகரிப்பினை காட்சிப்படுத்தி பரிசுகளை வென்றனர். இவர்கள் மாநில, தேசிய, ஆசிய மற்றும் உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றுள்ளனர், மருந்தாளுநர் சண்முகம் அஞ்சல் தலை சேகரிப்பினை பாராட்டி திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளபாநிறுவனர் நாசர், தலைவர் லால்குடி விஜயகுமார், செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், பொருளாளர் தாமோதரன், ஜலால் அன்பழக பாண்டியன், சிவகுமார், ரமேஷ் உட்பட பல அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கி பாராட்டினர். நிறைவாக இணைப்பொருளாளர் மகாராஜா நன்றி கூறினார்.