தேசிய பேரிடர் மீட்புப் படை அரக்கோணம்  வாளகத்தில் ஆய்வு

தேசிய பேரிடர் மீட்புப் படை அரக்கோணம் வாளகத்தில் ஆய்வு

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில், தேசிய பேரிடர் மீட்புப் படை NDRF ன் தென் மண்டல DIG Dr. ஹரி ஓம் காந்தி படை பிரிவு வாளகத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு அதிகாரிகள் மற்றும் பேரிடர் மீட்புப் படை வீரர்கள்களுடன் கலந்து உரையாடினார். முன்னதாக தேசிய பேரிடர் மீட்புப் படை அரக்கோணம் சீனியர் கமாண்டன்ட் அகிலேஷ்குமார் வரவேற்றார்.

பின்பு படை பிரிவு வளாகத்தில் மேம்படுத்த பட்ட மருத்துவ அறைகளை திறந்து வைத்தார் பின்பு மோப்ப நாய்கள் படை பிரிவின் சாகசங்களை பார்வையிட்டார் மேலும் தெலங்கானா மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்களின் பயிற்சியை பார்வையிட்டு வீரர்களுடன் கலந்துரையாடினார்.

பேரிடர் மீடபு உபகரணங்கள் வீரர்கள் தங்கும் அறைகள் உணவு விடுதிகள் மற்றும் ஒருங்கிணைந்த அவசர கட்டுப்பாடு மையம் ஆகியவை பார்வையிட்டு ஆய்வு பணியில் ஈடுபட்டார். உடன் பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் dr. சுனில், சைலேந்திர சிங். துணை கமாண்டன்ட் சங்கேத், கபில், சுதாகர், ஸ்ரீதர் ஆகியோர் உடன் இருந்தனர் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
Let's chat on WhatsApp
Vino Baji

How can I help you? :)

15:42
Hide WhatsApp Form
Contact Us
Close