சென்னை: சென்னையை அடுத்த மாங்காடு பகுதியில், சாலையை மறித்து கத்தியால் கேக் வெட்டிய ரவுடி கும்பலை தட்டிக் கேட்ட பொதுமக்கள் மீது, அந்த கும்பல் அரிவாள்களுடன் ஓட ஓட தாக்கிய அதிர்ச்சி சம்பவம் நேற்று நடந்தது.
இந்த தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்து, அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் நடந்த உடனேயே அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
இதனிடையே, கீழ்ப்பாக்கம் பகுதியில் நேற்று ஒரு ரவுடி வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்த நிலையில், அடுத்தடுத்து நடந்த இந்த வன்முறைச் சம்பவம் சென்னைவாசிகளிடையே கடும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
ரவுடிசத்தை கட்டுப்படுத்த காவல்துறையின் தீவிர நடவடிக்கை அவசியம் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

