சென்னை, ஆர்கே நகர்:
ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட சிவாஜி நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் வகையான ஹான்ஸ் பாக்கெட்டுகளை விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஆர்.கே.நகர் போலீசார் ரெய்டு நடத்தியதில், புஷ்பா என்பவர் (வயது 74) கைது செய்யப்பட்டார்.
காவல்துறையினர் நடத்திய சோதனையில், அவரிடம் இருந்து பல ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட மூதாட்டி மீது போதை பொருள் தடைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

