ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி முழு வீச்சில் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா அவர்கள் வாலாஜாபேட்டை மற்றும் அம்மூர் பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்காளர் படிவங்களை வழங்கி ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த சிறப்பு திருத்தப்பணி, தகுதியான புதிய வாக்காளர்களை சேர்த்தல், உயிரிழந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோர் பெயர் நீக்கம், இரட்டைப் பதிவு தவிர்த்தல் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வீடு வீடாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சென்று கணக்கெடுப்புக்கான படிவங்களை வழங்கி வருகின்றனர். இதன் மூலம் எந்த தகுதியான வாக்காளரும் விடுபடாமல் உறுதி செய்யப்படுகிறது.
இந்த நிகழ்வில் வாலாஜா வட்டாட்சியர் ஆனந்தன், நகராட்சி ஆணையாளர் இளையராணி, நகர மன்ற தலைவர் ஹரிணிதில்லை, கவுன்சிலர் சுரேஷ், அரசு அதிகாரிகள், தேர்தல் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 
செய்தி:ஆர்.ஜே. சுரேஷ்.91502 23444

