சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
விசிக கட்சியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், மதியம் நீதிமன்ற வளாகத்திலுள்ள பார் கவுன்சில் அலுவலகம் அருகே தனது காரில் பயணித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, வேகத்தடை பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு வழக்கறிஞரை திருமாவளவன் கார் மோதியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு சூழலில், காரில் இருந்த கட்சி நிர்வாகிகள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இணைந்து அந்த வழக்கறிஞரை தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் “தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” எனக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற வளாகத்தில் சில நிமிடங்களுக்கு பரபரப்பு நிலவிய நிலையில், காவல்துறை விரைவில் சமாதானம் செய்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.


