மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 8 குழந்தைகள் தொடர்ச்சியாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பயன்படுத்திய இருமல் மருந்தே காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், Coldrif இருமல் சிரப் தமிழ்நாட்டில் விற்பனைக்கு தடை செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
உயிரிழந்த குழந்தைகளின் உடற்கூராய்வில், சிறுநீரக திசுவில் Diethylene Glycol என்ற ஆபத்தான ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக இந்த ரசாயனம் மை, பெயிண்ட் தயாரிப்பில் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, மருந்தகங்களில் இருந்து Coldrif சிரப்பை உடனடியாக பறிமுதல் செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


