சேலம் எடப்பாடியில் கருவின் பாலினத்தை தெரிவித்து வந்த தனியார் மருத்துவமனைக்கு சீல்!
சேலம் மாவட்டம் எடப்பாடியில் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை சட்டவிரோதமாக தெரிவித்து வந்த தனியார் மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
கர்ப்பிணிப் பெண் ஒருவரை ஸ்கேன் செய்ய அனுப்பி வைத்த நிலையில், திடீரென உள்ளே நுழைந்த அதிகாரிகள், மருத்துவமனையின் செயல்பாடுகளை சோதனை செய்தனர். இதில், மருத்துவர் கண்ணன், அவரது மனைவி ஜோதி மற்றும் மேகநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சம்பவத்தையடுத்து, மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்து மூடி வைத்தனர். கருவின் பாலினத்தை தெரிவிப்பது சட்டவிரோதம் என்பதால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


