சென்னை கோட்டூர்புரத்தில் 2009ஆம் ஆண்டு நடந்த மரண வழக்கில், முன்னாள் எஸ்.ஐ. மற்றும் 2 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
குடிபோதையில் தகராறு செய்த பழனி என்ற நபர் காவல் நிலையம் சென்று வீடு திரும்பியதும் உயிரிழந்தார். இதையடுத்து ஆர்.டி.ஓ. விசாரணையில், போலீசார் தாக்கியதே மரணத்திற்குக் காரணம் என தெரியவந்தது. இதனால் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
அதன்பேரில் அப்போது எஸ்.ஐ.யாக பணியாற்றிய ஆறுமுகம் மற்றும் தலைமைக் காவலர்கள் மனோகரன், ஹரிஹர சுப்பிரமணியன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் 2 காவலர்கள் உயிரிழந்ததால், அவர்கள்மீது இருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.


