துபாய்:
உலகின் மிக உயர்ந்த கட்டடமாக விளங்கும் புர்ஜ் கலிபாவில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது புகைப்படம் ஒளிரச் செய்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையேயான தூதரக மற்றும் பொருளாதார உறவுகள் வலுப்பெற்று வரும் நிலையில், பிரதமர் மோடியை கௌரவிக்கும் விதமாக இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வு, வெளிநாடுகளில் இந்தியாவின் வளர்ந்து வரும் மரியாதையையும், இந்தியா–ஐ.அ.அ. இடையேயான உறவின் வலிமையையும் வெளிப்படுத்துவதாகக் குறிப்பிடப்படுகிறது.


