சென்னை மாநகர காவல்துறை, வாகன ஓட்டிகளுக்கான புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் படி, போக்குவரத்து விதிமீறலுக்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகையை முழுமையாகச் செலுத்தினால்தான், இனி வாகனங்களின் இன்சூரன்ஸ் புதுப்பிக்க அனுமதி வழங்கப்படும்.
தற்போது சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான அபராதத் தொகை நிலுவையில் உள்ளதாகவும், இதனை வசூல் செய்வதற்காக காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த புதிய நடைமுறையால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதோடு, நிலுவை அபராதத் தொகைகளும் விரைவில் வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

