மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம். சைகை மூலமாக தாய் தந்தைக்கு உணர்த்தினார்.
Rape of disabled woman. The mother communicated to the father through gestures.
31 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 21 வயது இளைஞர் கைது அதிமுக பொதுக்கூட்டத்தில் தாய், தந்தை சென்றிருந்தபோது நடந்த சோகம்.போலீசார் விசாரணை.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த ஆலங்கனேரி கிராமத்தில் அதிமுக கிளை செயலாளர் முனிசாமி மனைவி சாவித்திரி (எ) தேவி இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில் இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இரண்டாவது பெண் கௌதமி வயது 31 மாற்றுத்திறனாளி என்பதால் திருமணம் ஆகாமல் வீட்டிலேயே தாய் தந்தையுடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று கே.வி.குப்பத்தில் நடந்த அதிமுக. கட்சி பொதுக் கூட்டத்திற்கு கிளைச் செயலாளர் முனிசாமி மற்றும் அவர் மனைவி சென்று இருந்தன. பொதுக்கூட்டம் முடிந்து வீட்டிற்கு சென்றவுடன் மாற்றுத்திறனாளியான கௌதமி நடந்த சம்பவத்தை தனது செய்கை மூலம் தெரிவித்துள்ளார். உடனடியாக தந்தை முனிசாமி கே.வி.குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து சென்ற காவல் துறையினர் விஷாலை தேடி வந்தன.
இந்நிலையில் விஷால் நேற்று இரவு கிடைக்காததால் நண்பர்கள் தானேஷ் குமார் மற்றும் நிவாஸ் இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் இந்நிலையில் விஷால் வீட்டில் மது போதையில் இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவலின் பெயரில் விரைந்து சென்ற கே.வி.குப்பம் காவல்துறையினர் விஷாலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் விஷாலுக்கு தாய் தந்தை யாரும் இல்லை என்பதால் மாற்றுத்திறனாளியான கௌதமியின் தாய் தந்தை தான் அவரை பார்த்துக்கொண்டு வந்துள்ளனர். மேலும் கௌதமியை மருத்துவ பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக பிள்ளை போல் வளர்த்து வந்த உறவினர் மகன் மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார். 9150223444