சென்னை, செப்.1 –
தமிழக அரசின் இளஞ்சிவப்பு (பிங்க்) ஆட்டோ திட்டத்தின் கீழ் பெண்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
20 முதல் 45 வயதுக்குட்பட்ட, சென்னையை சேர்ந்த பெண்கள் இதில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சென்னை மாவட்ட சமூக நல அலுவலர், 8வது தளம், சிங்கார வேலர் மாளிகை, சென்னை–600 001 என்ற முகவரிக்கு, வரும் 15ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

