கண்ணூர், செப்.1–
கேரளாவில் அரிதான வகை நோயான அமீபா மூளைக்காய்ச்சல் பரவல் கவலைக்கிடமாக தொடர்கிறது.
கண்ணூர் மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த 52 வயது பெண் ஒருவர், கடந்த மாதம் இந்நோயால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற அவர், உடல்நலம் தேறியதால் கடந்த மாதம் 11-ம் தேதி வார்டுக்கு மாற்றப்பட்டார்.
ஆனால், ஆகஸ்ட் 26-ம் தேதி மீண்டும் காய்ச்சல், வாந்தி ஏற்பட்டதால் உடல்நிலை மோசமடைந்தது. தொடர்ந்த சிகிச்சை பலனின்றி, நேற்று அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீபா மூளைக்காய்ச்சல் தொடர்ந்து பரவி வருவதால், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

