சென்னை, செப்.1–
சென்னை திருமங்கலம் ஜமீன்தார் தெருவை சேர்ந்த ரமேஷ் சந்த், மோட்டார் சைக்கிள் மற்றும் கார்கள் தொடர்பான பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
பெரம்பூர், தீட்டி தோட்டத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (32), தனது மோட்டார் சைக்கிளின் ஆர்.சி. புத்தகத்தை அடமானம் வைத்து ரமேஷ் சந்திடம் ரூ.8 லட்சம் கடன் பெற்றார். பின்னர், அந்த ஆர்.சி. புத்தகம் தொலைந்துவிட்டதாகக் கூறி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் புகார் அளித்து டூப்ளிகேட் ஆர்.சி. புத்தகத்தை பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, “எனது ஆர்.சி. புத்தகத்தை வைத்து யாரோ ரமேஷ் சந்திடம் கடன் பெற்றுள்ளனர். அதற்கு எனக்கு சம்பந்தமே இல்லை” என்று பொய் குற்றச்சாட்டு கூறி திரு.வி.க நகர் போலீசில் மோகன்ராஜ் புகார் அளித்தார்.
விசாரணையில், கடனை திருப்பிச் செலுத்தாமல் தவிர்க்கவே மோகன்ராஜ் இந்த புகாரை அளித்தது வெளிச்சம் பெற்றது. இதையடுத்து, ரமேஷ் சந்த் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
கோர்ட்டு அறிவுறுத்தலின் பேரில், திரு.வி.க நகர் போலீசார் மோகன்ராஜ் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

