சென்னை, செப்.1 –
தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மாநகராட்சி ஊழியர்களே திட்டமிட்ட வகையில் குப்பைகளை அங்கு கொட்டுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குப்பை மூட்டைகளால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் மற்றும் நோய்த்தொற்றுகள் பரவும் அபாயமும் அதிகரித்துள்ளதாகவும், இதனை தவிர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க மாநகராட்சி உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

