ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் முதல் மாவட்ட கோரிக்கை மாநாடு வாலாஜா பைபாஸ் சாலை அருகிலுள்ள தமிழ் மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாநாட்டில், வருவாய் துறை அலுவலர்களுக்கான சிறப்பு பணிபதுகாப்பு சட்டம், கருணை அடிப்படையிலான பணியிலக்கு 5% இலிருந்து 25% ஆக உயர்த்துதல் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் ஜே.கே. விஜயசேகர் தலைமை வகிக்க, மாநில பொருளாளர் வி.தியாகராஜன் துவக்கவுரை ஆற்றினார். மாநில தலைவர் ஜே.ராஜா, மாவட்ட செயலாளர் செல்வகுமார், பொருளாளர் கன்னியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தீர்மான உரையாற்றினர். சுமார் 250-க்கும் மேற்பட்ட வருவாய் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

