சென்னை, ஆக.31 –
தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ். இன்று ஓய்வு பெற்றார். இதையடுத்து, சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபி பதவிக்கு ஐ.பி.எஸ் அதிகாரி வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள டிஜிபி அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் வெங்கட்ராமன் அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தன்னுடைய முழு திறனையும் செலுத்துவதாக அவர் தெரிவித்தார்.

