உத்தரப் பிரதேசம், கைரிகாட்:
கால்வாயில் குளித்துக் கொண்டிருந்த 5 வயது சிறுவனை முதலை தாக்கி இழுத்துச் செல்ல முயன்றது. அந்த சமயத்தில் சிறுவனின் அலறல் சத்தத்தை கேட்ட தாய் தண்ணீரில் குதித்து தைரியமாக போராடி, மகனை உயிருடன் காப்பாற்றியுள்ளார்.
கையில் இருந்த கம்பியால் முதலையின் தாடையை அடித்த தாயின் வீரச் செயலில், முதலை சிறுவனை விடுவித்து தண்ணீருக்குள் சென்று மறைந்தது.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
“தாயின் தைரியத்துக்கு மக்கள் பாராட்டு மழை பொழிகின்றனர்”

