தனது மூன்று மகள்களை கொலை செய்த பின்னர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

தனது மூன்று மகள்களை கொலை செய்த பின்னர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்லில் மனதை பதறவைத்த துயரச் சம்பவம்

 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கொடூரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

 

அங்குள்ள கோவிந்தராஜ் (36) என்பவர் தனது மூன்று மகள்களை கொலை செய்த பின்னர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

கொலை செய்யப்பட்ட குழந்தைகள் –

பிரக்திஷா ஸ்ரீ (9)

ரித்திகா ஸ்ரீ (7)

தேவஸ்ரீ (3)

வீடு கட்டும் பொருட்டு கடன் பெற்றிருந்த கோவிந்தராஜ், அதை திருப்பிச் செலுத்த முடியாமல் கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனஅழுத்தத்துக்குள்ளான அவர், நேற்று தனது மூன்று மகள்களையும் கூரிய ஆயுதம் கொண்டு வெட்டிக் கொன்றுவிட்டு, பின்னர் விஷம் அருந்தி உயிரை மாய்த்துக் கொண்டார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப சூழ்நிலை மற்றும் கடன் சுமை காரணமாக ஏற்பட்ட இந்த துயரச் சம்பவம், நாமக்கல் மாவட்ட மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook