மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி தகவல்: 23,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மாயம்
போபால்: கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மத்தியப் பிரதேசத்தில் 23,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மாயமாகியுள்ளனர் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
அதில், 1,900-க்கும் மேற்பட்ட சிறுமிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக காணாமல் போயுள்ளன. இந்த தகவல் வெளியான நிலையில், மாநில மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது.
மகளிர் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்த கேள்விகள் எழுந்துள்ள நிலையில், மாயமான பெண்கள் மற்றும் சிறுமிகளை பாதுகாப்பாக மீட்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

