தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ராதிகா சரத்குமார் தற்போது உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெங்கு காய்ச்சல் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டதால், இரு நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ராதிகா தற்போது நிலையான உடல்நிலையில் இருப்பதாகவும், மேலும் 5 நாட்கள் மருத்துவர்கள் மேற்பார்வையில் சிகிச்சை பெற்று பின் இல்லம் திரும்புவார் என்றும் மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா ரசிகர்கள், அரசியல் ரசிகர்கள் எனப் பலரும் சமூக வலைதளங்களில் அவருக்கு விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
👉 ராதிகா சரத்குமார், 1978-ஆம் ஆண்டு முதல் திரையுலகில் அறிமுகமாகி, 40 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகை மட்டுமல்லாமல், சீரியல் தயாரிப்பாளர், தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதியாகவும் அவர் அறியப்படுகிறார்.

