“கியாஸ் விலை குறித்து ஏன் மௌனம் காக்கிறார் இபிஎஸ்?” – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கேள்வி
சென்னை:
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கடும் விமர்சனம் செய்துள்ளார்.
உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதோடு, தானே உயர்த்திய மின்கட்டணம் குறித்து இன்று பேசிவரும் இபிஎஸ், ஒன்றிய அரசின் எல்பிஜி சமையல் எரிவாயு விலை உயர்வை குறித்து ஏன் மௌனமாக உள்ளார் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
“2014ல் ரூ.414 இருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தற்போது ரூ.868.50 ஆக உயர்ந்துள்ளது. இதை எதிர்க்கட்சித் தலைவர் கவனிக்கவில்லை என்றால் எப்படி? அல்லது எப்போதும் போல மக்கள் முன் நாடகம் ஆடுகிறாரா?” என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றம்சாட்டினார்.

