திருநெல்வேலி பாப்பாக்குடியில் பரபரப்பு
மோதலை சமரசம் செய்ய சென்ற உதவி காவல் ஆய்வாளர் மீது சிறுவன் தாக்குதல் – துப்பாக்கி சூட்டில் காயம்
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலைத் தடுப்பதற்காக சென்ற உதவி காவல் ஆய்வாளர் மீது 17 வயது சிறுவன் அரிவாளால் தாக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காவல் அதிகாரியின் மீது அரிவாளால் வெட்ட முயன்ற அந்த சிறுவனை, தற்காப்பு நடவடிக்கையாக உதவி காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த சிறுவன் உடனடியாக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் பதற்றம் நிலவ, கூடுதல் போலீஸ் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ விசாரணை நடைபெற்று வருவதாகவும், சிறுவனின் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

