கொலைக்களமாக மாறிய தமிழகம் – 4 நாளில் 4 படுகொலை!

கொலைக்களமாக மாறிய தமிழகம் – 4 நாளில் 4 படுகொலை!

கொலைக்களமாக மாறிய தமிழகம் – 4 நாளில் 4 படுகொலை!

 

தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ச்சியாக நடந்துவரும் கொலைச் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை, திருப்பூர், நெல்லை, தாராபுரம் என பல்வேறு இடங்களில் நடந்த இந்த படுகொலைகள் சட்டம்-சமாதான நிலையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

 

🔹 காதல் தகராறு – மாணவர் கொலை

சென்னை கே.கே.நகர் பகுதியில் மாணவர் ஒருவர் காரில் ஏற்றி கொலை செய்யப்பட்டார். திமுக பிரமுகர் தனசேகரனின் பேரன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

🔹 ஐகோர்ட் வக்கீல் வெட்டிக்கொலை

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஐகோர்ட் வக்கீல் முருகானந்த் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 2 கூலிப்படையினர் சேலத்தில் பதுங்கியிருந்த நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

 

🔹 மென்பொறியாளர் ஆணவக்கொலை

நெல்லையில் மென்பொறியாளர் கவின் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘தந்திரமாக பேசி அழைத்துச் சென்றபின் ஆணவத்தால் கொலை செய்யப்பட்டார்’ என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

🔹 எஸ்ஐ உயிரிழப்பு

சென்னை எழும்பூரில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் கடுமையாக காயமடைந்த சிறப்பு துணை ஆய்வாளர் (எஸ்ஐ) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 4 நாட்களில் நடந்த இந்த தொடர் கொலைச் சம்பவங்கள் தமிழகத்தில் பாதுகாப்பு நிலைமை குறித்த கேள்விகளை

எழுப்பி உள்ளன.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook