போபால்:
மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள வைரச் சுரங்கத்தில், ராஜ்பூரை சேர்ந்த பழங்குடியின பெண் வினிதா கோண்ட் 3 வைரங்களை கண்டெடுத்துள்ளார்.
வினிதா மற்றும் சிலர் குத்தகைக்கு எடுத்திருந்த அந்தச் சுரங்கத்தில், 1.48 காரட், 20 சென்ட் மற்றும் 7 சென்ட் எடை கொண்ட வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை விரைவில் ஏலத்திற்கு விடப்படவுள்ளன. பல லட்ச ரூபாய்களுக்கு இவை ஏலம் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து வைர வியாபாரி அனுபம்சிங் தெரிவித்துள்ளார்: “இந்த வைரங்களில் ஒன்று உயர்தரம் மிக்கது. மற்ற இரண்டும் குறைந்த தரம் கொண்டவை” என்றார்.


