சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த என். செந்தில்குமார், ஜி. அருள்முருகன் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.
இவர்களை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை செய்ததை தொடர்ந்து, ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில், நேற்று இருவரும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
அவர்களுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவத்சவா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்வில், நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், ஜெ. நிஷாபானு, எம்.எஸ். ரமேஷ், அனிதா சுமந்த் உள்ளிட்ட அனைத்து உயர்நீதிமன்ற நீதிபதிகளும், மாவட்ட நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் பங்கேற்றனர்.


