சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள சுபம் திருமண மாளிகையில் வட சென்னை பொது வியாபாரிகள் நல சங்கத்தின் 19 ஆவது ஆண்டு துவக்க விழா. மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர்கள் சங்கத்தின் பேரவையின் கிளை சங்கமான வடசென்னை பொது வியாபாரிகள் நல சங்கத்தின் 19ஆவது ஆண்டு துவக்க விழா தலைவர் A.S.J.பாலகுருசாமி தலைமையில், பொதுச் செயலாளர் கே.ராமகிருஷ்ணன் பொருளாளர் M.விஜயநாகேந்திரன் முன்னிலையில் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளின் ஒத்துழைப்போடு ஆண்டுவிழா மிக சீரும் சிறப்புமாக நடைபெற்றது. அதே நிகழ்வில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கத்தின் பேரவையின் முன்னாள் தலைவர் சுதேசி நாயகன் ஐயா, திரு, த.வெள்ளையன் அவர்களின் திருஉருவப்படம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து வடசென்னை பொது வியாபாரிகள் நல சங்கத்தின் முன்னாள் பொருளாளர் எஸ்.சித்திக் அவர்களின் திரு உருவ படம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவுருவப்படத்தை திறந்த வைத்து சிறப்புரையாற்றியவர், தமிழ்நாடு வணிகர்கள் சங்கம் பேரவையின் தலைவர் S.சௌந்தரராஜன், உடன் மாநில பொதுச் செயலாளர் வெ.மெஸ்மர்காந்தன், செயல் தலைவர் M.வியாசை மணி, N.A.தங்கதுரை, S.R.P.ராஜன், G.ராபர்ட், அ.ஆல்பர்ட்அந்தோணி,
கருப்பையா, சு.ராமமூர்த்திசோழன், P.மோகனசுந்தரம், மற்றும் மாநில முக்கிய நிர்வாகிகள். உடன் வடசென்னை பொது வியாபாரிகள் நல சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் A.திருப்பதி, A.வினோபாஜி, A.V.கருணாகரன் S.ஜோதிமணி, C.தங்கப்பூ, M.முத்துச்சாமி, G.எட்விட், D.மணி, G.சுயம்புலிங்கம், Y.மஸ்தான், V.ரமேஷ், மற்றும் வடசென்னை பகுதியில் இருக்கும் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். 

