15 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாது

15 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாது

புதுதில்லி

15 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாது: தில்லி அமைச்சர்

பழைய வாகனங்களுக்கு எரிபொருள் நிறுத்தம் தொடர்பாக. 15 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கு மார்ச் 31 ஆம் தேதிக்குப் பிறகு பெட்ரோல் நிரப்பும் நிலையங்களில் பெட்ரோல் வழங்குவதை நிறுத்தப்படவுள்ளதாக தில்லி சுற்றுசூழல் நலத் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்ஷா தெரிவித்துள்ளார்.

தேசிய தலைநகரில் நிலவும் காற்று மாசுபாட்டைக் குறைப்பது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அதிகாரிகளுடன் உடனான கூட்டத்தில் பங்கேற்றப் பின் பேசிய அமைச்சர் சிர்ஷா, வாகன மாசுபாட்டை கட்டுப்படுத்த தில்லி அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பழைய வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது, புகை எதிர்ப்பு நடவடிக்கைகள், மின்சார வாகனங்களுக்கு மாறுதல் தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பெட்ரோல் நிலையங்களில் நவீன கருவிகளை நிருவி 15 ஆண்டுகளுக்கும் மேல் இயக்கப்படும் பழைய வாகனங்களைக் கண்டறிந்து, அவ்வாகனங்களுக்கு பெட்ரோல் வழங்குவதை நிறுத்தவுள்ளோம்.” என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்த முடிவு குறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதை நிறுத்துவதுடன், காற்று மாசு அளவைக் குறைக்க தேசிய தலைநகரில் உள்ள உயரமான கட்டடங்கள் மற்றும் ஹோட்டல்களில் தண்ணீரைப் பயன்படுத்தி காற்று மாசைக் குறைக்கும் இயந்திரத்தை நிறுவ வேண்டும் என்றும் அவர் அறிவித்தார்.

தில்லியில் பொது போக்குவரத்துக்குப் பயன்படுத்தும் 90 சதவிகித சிஎன்ஜி பேருந்துகள் வரும் டிசம்பர் 2025-க்குள் படிப்படியாக நிறுத்தப்பட்டு, மின்சாரப் பேருந்துகளாக மாற்றப்படும் என்று அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்ஷா தெரிவித்தார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook