விழுப்புரம் மாவட்ட காவல்துறை அதிரடி சோதனை
1152 போதை மாத்திரைகள், 60 கிராம் கஞ்சா பறிமுதல் – வடமாநில இளைஞர் கைது
விழுப்புரம் | செய்தியாளர்
விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்தும் நோக்கில், விழுப்புரம் தாலுகா காவல் நிலையம் போலீசார் தொடர் கண்காணிப்பு மற்றும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஹோட்டல் அண்ணாமலை புறவழிச்சாலை சந்திப்பு அருகே கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் திரு. செல்வநாயகம், காவல் உதவி ஆய்வாளர் திரு. லியோ சார்லஸ் மற்றும் காவலர்கள் அடங்கிய குழு திடீர் சோதனை மேற்கொண்டது.
சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு, அவருடைய பையை சோதனை செய்தபோது 60 கிராம் கஞ்சா மற்றும் 1152 போதை மாத்திரைகள் (வலி நிவாரணி) வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்
ஹலீம் முல்லா (26)
த/பெ: அலி அக்பர் முல்லா
முகவரி: தக்சின் ராமச்சந்திரகாலி, பர்கனாஸ், மேற்குவங்காளம்
இதனையடுத்து, குற்றச்சாட்டுக்குள்ளான ஹலீம் முல்லாவை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த போதைப் பொருட்களை கைப்பற்றி, நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

