லஞ்சம் வாங்கியதாக மகளிர் காவல் ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு

லஞ்சம் வாங்கியதாக மகளிர் காவல் ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு

125 சவரன் நகையுடன் காதலன் மாயம் – லஞ்சம் வாங்கியதாக மகளிர் காவல் ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு

அண்ணா நகரைச் சேர்ந்த பெண்ணின் பரபரப்பு புகார் : “15 வருட ரிலேஷன்ஷிப், திருமண வாக்குறுதி பொய் – ஏழு நாட்களாக காவல் நிலையத்தில் அலையும் அவலம்”

அண்ணா நகரைச் சேர்ந்த ஒரு பெண், பம்மலில் வசிக்கும் தனது ஆண் நண்பன் 125 சவரன் நகையுடன் மாயமானதாகவும், அந்த புகாரை பதிவு செய்ய முயற்சித்தபோது பெண்கள் காவல் ஆய்வாளர் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாகவும் அதிர்ச்சி குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.

15 ஆண்டுகளாக அந்த ஆணுடன் தொடர்பில் இருந்ததாகவும், திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்ததாகவும் பெண் கூறுகிறார். பின்னர் தான் அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரியவந்ததாகவும், தொழில் செய்வதாகக் கூறி சிறிது சிறிதாக 125 சவரன் நகையை பறித்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து நொளம்பூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தபோது, “எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய பத்தாயிரம் ரூபாய் வசூலித்தனர்” எனவும், “நான் கேள்வி கேட்டால் மிரட்டி, என்னையே தவறான கேள்விகளால் அவமதிக்கிறார்கள்” என்றும் அவர் குமுறினார்.

“ஏழு நாட்களாக காவல் நிலையத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கிறேன். எனது புகாரில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. ‘நீ தவறு செய்துள்ளாய், யாரையும் தேடி எங்களால் கண்டுபிடிக்க இயலாது’ என்று காவல் ஆய்வாளர் அலட்சியமாக பதிலளிக்கிறார்” என அவர் குற்றஞ்சாட்டினார்.

தினமும் கமிஷனர் அலுவலகம், துணை கமிஷனர் அலுவலகம் என அலைந்து கொண்டிருப்பதாகவும், நீதியில்லா நிலைமையில் தவித்துக் கொண்டிருக்கிறேன் எனவும் அந்த பெண் கண்ணீருடன் தெரிவித்தார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook