ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு செங்குந்தர் புதிய ஒத்தவாடை தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பத்தாண்டுக்கு மேலாக கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது நகராட்சி நிர்வாகம் கோரிக்கையை ஏற்று பொது நிதியிலிருந்து ரூபாய் 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தது. இதனைத் தொடர்ந்து கழிவுநீர் கால்வாய் மீது குடியிருப்பு வாசிகள் படிக்கட்டுகள் சாய்வு தளம் அமைத்து ஆக்ரமிப்பு செய்துள்ளனர். ஆகிரமிப்பு அகற்றுவது குறித்து நகராட்சி ஆணையர் பொறுப்பு பிரீத்தி, பொறியாளர் ஆசிர்வாதம் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கால்வாய் மீது ஆக்கிரமிப்பு செய்துள்ள படிக்கட்டுகள் சாய்வுதளம் அகற்றுவது குறித்து முறையாக குடியிருப்பு வாசிகளுக்கு தெரிவித்து பின்னர் ஆக்கிரமிப்பு அகற்றி கால்வாய் அமைக்க உள்ளதாக தெரிவித்தார். ஆய்வின் போது நகராட்சி பணி மேற்பார்வையாளர் ஆனந்தன், வார்டு உறுப்பினர் மோகனா சண்முகம் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் இருந்தனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.9150223444