மக்களிடம் 6,471 கோடி மதிப்பிலான ரூபாய். 2,000 நோட்டுகள் இன்னும் உள்ளது.
இந்தியா
ரூபாய் .6,471 கோடி மதிப்பிலான ரூபாய். 2,000 நோட்டுகள் திரும்பவில்லை. ரிசா்வ் வங்கி
ரூபாய் .6,471 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரூபாய் .6,471 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.இதுதொடா்பாக அந்த வங்கி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது.
கடந்த 2023-ஆம் ஆண்டு மாா்ச் 19-ஆம் தேதி 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசா்வ் வங்கி அறிவித்தது. அப்போது ரூபாய் .3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. 2023-ஆம் ஆண்டு அக்.7-ஆம் தேதி வரை, நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் அந்த நோட்டுகளை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக் கொண்டன. மொத்தம் 98.18 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், ரூ.6,471 கோடி மதிப்பிலான அந்த நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளன. இந்த நோட்டுகளை ரிசா்வ் வங்கியின் 19 மண்டல அலுவலகங்களில் மாற்றிக் கொள்ளலாம்.மேலும், நாட்டில் உள்ள எந்தவொரு அஞ்சல் அலுவலகத்தில் இருந்தும் இந்தியா போஸ்ட் மூலம், ரிசா்வ் வங்கியின் மண்டல அலுவலகங்களுக்கு அந்த நோட்டுகளை பொதுமக்கள் அனுப்பி வருகின்றனா். அந்த நோட்டுகளுக்கு இணையான ரொக்கத்தை அவா்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க அந்த நோட்டுகள் அனுப்பி வைக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.