தோல் தொழிற்சாலை கழிவுநீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈட்டை வழங்கவும். சுத்திகரிக்கப்படாமல் நீரை வெளியேற்றும், உரிமையாளர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும். என்ன நடவடிக்கையை எடுத்தீர்கள் என வேலூரில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் சரமாரி கேள்வி அதிகாரிகள் திணறல்.
வேலூர்மாவட்டம், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமையில் நடந்தது இதில் அனைத்து துறை அரசு அதிகாரிகளும் விவசாயிகளும் திரளானோர் பங்கேற்றனர் இதில் விவசாயிகள் பேசுகையில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளால் ஆயிரக்கணக்கான விவசாய விளைநிலங்களும் பொதுமக்களும் பாதிக்கபடுகின்றனர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இந்த நஷ்ட ஈட்டை எப்போதும் வழங்குவீர்கள் கணக்கெடுப்பு பணியானது துவங்கியுள்ளதா மேலும் கழிவு நீரை சுத்தம் செய்யாமல் கழிவுநீரை வெளியேற்றும் ஆலை உரிமையாளர்களை கட்டாயம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மாசுகட்டுபாட்டு வாரியம் எந்த நடவடிக்கையையும் ஏன் எடுக்கவில்லை மாசுக்கட்டுபாட்டுவாரியம் கழிவுநீரில் ரசாயணம் கலப்பதை அளவீடு செய்து கண்காணிப்பது கிடையாது என சரமாரியாக குற்றம்சாட்டினார்கள் விவசாயிகளின் கேள்வியால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர் மேலும் விவசாயிகள் பேசுகையில் நில உரிமையாளர்கள் வருவாய்த்துறையில் நில ஆவணத்தைஆவணத்தை ஏற்படுத்த பதிவு செய்ய வேண்டுமென கால அவகாசம் மார்ச் 6ஆம் தேதி வரையில் கால அவகாசம் வழங்கியுள்ளது போதுமானதல்ல அதனை கால நீட்டிப்பு செய்ய வேண்டும் ஏரி கால்வாய்களை தூர்வார வேண்டும் தென் பென்னை பாலாறு இணைப்பு திட்டம் குறித்து தமிழக அரசு மீண்டும் மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டது அதன் பணிகளை துவங்கவுள்ளோம் என அதிகாரிகள் கூறினார்கள்.